நடிகர், இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இதில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், அக்டோபர் 15 ஆம் தேதி
இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ’கட்டில்’ திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கும் கட்டில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...