Latest News :

83 வயதில் ஹீரோவாகும் பி.வி.நம்பிராஜன்!
Sunday October-17 2021

‘என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனை கிளி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பி.வி.நம்பிராஜன், கதையின் நாயகனாக ‘அஸ்திவாரம்’ என்ற படத்தில் நடிக்கிறார். 

 

வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பி.வி.நம்பிராஜன், தனது 83 வயதில் கதையின் நாயகனாக நடிப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த செய்திருக்கிறது.

 

ஜி.ஜி.ஆர் மூவி எண்டர்பிரைசஸ் சார்பில் தொழிலதிபர் ஏ.இசட்.ரிஸ்வான் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நாயகன் ஒருவரும் அறிமுகமாக, முன்னணி நடிகர், நடிகைகள் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

இயக்குநர் பாரதி கணேஷிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய உடைமை எஸ்.அஜ்மீர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

 

Asthivaaram

 

படம் குறித்து இயக்குநர் எஸ்.அஜ்மீர் கூறுகையில், “தமிழ் திரை உலக வரலாற்றில் 83 வயது முதியவர் கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல்முறை என்றால் அது மிகையாகாது. வயது குறைந்த நடிகர்கள் மேக்கப் போட்டு முதுமை தோற்றத்தில்  நடித்த படங்கள் பல உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல். ரஜினி, விஜயகாந்த், வி.கே.ஆர், சத்யராஜ், பிரபு, சரத்குமார், என நிறைய நடிகர்கள் அப்படி நடித்த படங்கள் உள்ளது. ஒரிஜினலாக 83 வயதுடைய பி.வி.நம்பிராஜன் நாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவில் நடக்கும் புதுமை. இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டு, முழுவதும் வேறுபட்டு இருக்கும் என்று நான் கூறமாட்டேன். இதைவிட மேலான வார்த்தைகளை படம் பார்த்தபின் பார்த்தவர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த ‘அஸ்திவாரம்’ படத்தின் கதையை அமைத்துள்ளேன்.” என்றார்.

 

நவம்பர் மாதம் தொடங்க உள்ள இப்பட்த்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பித்தளைபட்டி, ஆத்தூர், சின்னாளபட்டி, பிளையார்நத்தம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. படத்தை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

7823

’ஜுராசிக் வேர்ல்டு : ரீபர்த்’ பற்றி மனம் திறந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்!
Wednesday June-18 2025

உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...

’மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பலர் என்னை கட்டிப்பிடித்த அழுதார்கள்! - நடிகர் காளி வெங்கட் நெகிழ்ச்சி
Wednesday June-18 2025

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...

ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!
Monday June-16 2025

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...

Recent Gallery