இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஆதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள், விரைவில் வெளியிடவுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில், கமர்ஷியல் படங்களின் வெற்றி நாயகனாக வலம் வரும், நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தற்போதைக்கு RAPO19 தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், தற்போதே விநியோக தளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வணிக ரீதியாக தொடர் வெற்றிப்படங்களை தரும் இயக்குநர் லிங்குசாமியுடன், நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதால், இப்படம் ‘100% கமர்ஷியல் பிளாக் பஸ்டராக ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் லிங்குசாமி எப்பொழுதும் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு மிகவும் பிடித்தவர், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள், இவருடன் இணைந்து படம் செய்ய, வெகு காலமாக ஆவலுடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கௌடா ஆகியோருடன், பெரும் திறமையாளரான ஆதி பினுஷெட்டி இனைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...