விஷாலின் புதிய படத்தின் தலைப்பு ‘லத்தி’
Sunday October-17 2021

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாலம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு ‘லத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் தயாரிப்பு தரப்பில் பணியாற்றிய ஏ.வினோத் குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஏ.வினோத்குமாருடன் இணைந்து பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

 

விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் பிரபு நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

Lathi

 

விஷால் நடிப்பில் ‘எனிமி’ தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், மற்றொரு படமான ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7827

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery