ஒடிடி தளங்களின் வெற்றியை தொடர்ந்து குறும்படங்கள் மற்றும் இணைய தொடர்கள் பல மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் கெளரிஷ் நடித்த ‘பியார்’ என்ற குறும்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, திரையுலக பிரபலங்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.
‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்த ‘சண்டிமுனி’ திரைப்படத்தை இயக்கிய மில்கா எஸ்.செல்வக்குமார் ‘பியார்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதில் கெளரிஷ் மற்றும் ஷபி பாபு ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் ச்ஷார்ட் கட்ஸ் யூடியூப் சேனலில் ஆயுத பூஜை தினத்தன்று வெளியான இந்த குறும்படம் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதோடு, சினிமா பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் கெளரிஷின் நடிப்பை பலர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
‘8 தோட்டக்கள்’, ‘ஜீவி’ படங்களில் நாயகன் வெற்றி நாயகனாக நடிக்கும் ‘ஜோதி’ என்ற படத்தில், வில்லனாக அறிமுகமாக இருக்கும் நடிகர் விஜய் கெளரிஷ், ’ஜோதி’ திரைப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களை மகிழ்விக்க நாயகன், வில்லன் என்றில்லாமல் அனைத்து விதமான முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிப்பதே தன் விருப்பம், என்றும் தெரிவித்துள்ளார்.
’பியார்’ குறும்படத்தை இயக்கிய மில்கா எஸ்.செல்வகுமார், ‘சண்டிமுனி’ படத்தை தொடர்ந்து, தற்போது யோகிபாபு நடிப்பில் ‘கங்காதேவி’ என்ற படத்தை இயக்க உள்ளார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...