Latest News :

’ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல் “பவர்...” வெளியானது
Tuesday October-19 2021

தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

 

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தைச் சுற்றி அற்புதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

தங்களுக்குப் பிடித்தமான சூப்பர்ஸ்டார் சூர்யாவையும் அவரது அட்டகாசமான நடிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே இந்தப் படத்துக்கான காத்திருப்பும் உற்சாகமும் விண்ணைத் தொட்டுள்ளது.

 

”பவர்...” என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலை ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். துள்ளலான இந்தப் பாடல், நேர்மையைப் பற்றியும், சமத்துவத்தை அடைய இருக்கும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.

 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் சூர்யாவின் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம். அதிக உத்வேகத்தோடு இருக்கும் இந்தப் பாடல் கண்டிப்பாக உங்களைத் தலையாட்ட வைக்கும். உங்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும்.

 

பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

 

உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசனின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

Related News

7830

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery