Latest News :

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை வென்ற ‘விநோதய சித்தம்’
Thursday October-21 2021

சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் ‘விநோதய சித்தம்’ திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பின் மனதையும் ஒருசேர வென்றுள்ளது.

 

இந்த வெற்றி குறித்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கூறுகையில், “'சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் ’விநோதய சித்தம்’ காலத்திற்கு நன்றி” என்றார்.

 

ஜீ5 இந்தியாவின் முதன்மை வியாபார அதிகாரி கூறுகையில், “தரமான படங்களை தருவதே எங்கள்  ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் வழங்கி வருகிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம் போன்ற எங்களது தளத்தில் தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

 

ஜீ5 நிறுவனத்தின் தென்னிந்தியாவுக்கான அதிகாரி கூறுகையில், ”எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.” என்றார்.

 

தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

 

படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான,  ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குநர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது. 

Related News

7835

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery