Latest News :

ஜிப்ரான் இசையில் உருவான ‘வீரவணக்கம்’ பாடல் - முதல்வர் வெளியிட்டார்
Thursday October-21 2021

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

 

இந்த ஆண்டு, இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 21) காலை வெளியிட்டார்.

 

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில், ”“வீரவணக்கம்...” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்ட போது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும் போது மற்றொருவர் கொரோனாவில் மருத்துவமனைக்கு சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் காவல்துறை பணியில் இருந்த போதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அவர்களை பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் Dr.வருண் குமார்  IPS, வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா? என என்னை கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று உடனே ஒப்புக் கொண்டேன். 

 

Gibran Veeravanakkam Song

 

இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம்.  பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி Dr.வருண் குமார்  IPS அவர்களின் ஈடுபாடு தான்,  இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம் அவருக்கு நன்றி. இன்று இப்பாடல் வெளியாகிறது. பாடலை கேட்டு மகிழுங்கள், நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம் நன்றி.” என்றார்.

Related News

7836

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery