Latest News :

சினேகா நடிக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’
Saturday October-23 2021

சினேகா - பிரசன்னா நடிப்பில் வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அருணாச்சலம் வைத்யநாதன், அப்படத்தை தொடர்ந்து அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதோடு, விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் இணை தயாரிப்பையும் கவனித்தார்.

 

தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்கி வரும் அருணாச்சலம் வைத்யநாதன், அப்படத்திற்கு ‘ஷாட் பூட் த்ரீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகை சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன்

பூவையார் (மாஸ்டர்), பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

 

 

படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதன், “குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின்  உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம். அன்புக்கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்.

 

பொதுவாக குழந்தைகளை வைத்து படத்தை இயக்குவது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், அதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக நாங்கள் மாற்றியுள்ளோம். ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படுவதற்கு முன்னர் 20 முறை ஒத்திகை பார்க்கப்படுகிறது.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவை இயக்குவது ஜாலியான அனுபவம். யோகி பாபு தனது தனித்துவ பாணியில் படத்திற்கு மெருகு சேர்க்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை ஆனந்த் ராகவ்வுடன் இணைந்து கொரோனாவுக்கு முன்னரே நான் எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளோம்.” என்றார்.

 

சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைக்கிறார். சதீஷ் சூரியா படத்தொகுப்பு செய்ய, ஆறுசாமி கலையை நிர்மாணிக்கிறார். 

 

தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இயக்கும் அருணாச்சலம் வைத்தியநாதன், படத்தை கோடை கொண்டாட்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

Related News

7839

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery