பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள போகும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகு அரசியலில் குதிக்கப் போவதாகவும், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா - நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. 6 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கோவாவிலும், 7 அம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அரசியலில் ஈடுபட உள்ள சமந்தா, 2019 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வேலையில் சமந்தாவின் வருங்கால மாமனாரான நடிகர் நாகர்ஜூனா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்ந்து வரும் செகந்திராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிட போவதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செய்தி பரவி வருகிறது.
இது அதிகாரப்பூர்வமான செய்தி இல்லை என்றாலும், இதுவரை இந்த செய்திக்கு சமந்தா தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...