சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியான ‘டாக்டர்’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சுமார் ரூ.90 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஒடிடி-யில் ‘டாக்டர்’ படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தொலைக்காட்சியிலும் தீபாவளியன்று ‘டாக்டர்’ படம் திரையிடப்பட உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...