‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜுவி’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வனம்’. ஸ்ரீகாந்த் ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை கோல்டன் ஸ்டார் நிறுவனம் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே.பி.அமலன், ஜே.பி.அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் பிரபல விநியோக மற்றும் தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றதால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் மிரட்டலான டிரைலர், எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
வரலாற்று பின்னணியில், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியும், படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் இருப்பதோடு, மேக்கிங்கும் மிரட்டலாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...