நாகரீகம் வளர்ந்தாலும், மனிதருக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கொடூர மனிதத்தை பற்றி பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘கொடியன்’.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் டோனிசான். சக்ரவர்த்தி பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நேரு நகர் நந்து தயாரித்திருக்கும் இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்று வருகிறது.
நிவாஸ் ஆதித்தன் நாயகனாகவும், நித்யஸ்ரீ நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் யோக் ஜேப்பி வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் லிசி ஆண்டனி, புதுமுகம் விக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கேபர் வாசுகி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரிநந்த் - விஜய் கார்த்திகேயன் பின்னணி இசையமைத்துள்ளனர்.
வழக்கமான திரில்லர் பார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சியோடு உருவாகியிருக்கும் இப்படத்தில், கையாளப்பட்ட அந்த புதிய முயற்சி மிகப்பெரிய அளவில் கவனம் பெரும், என்று கூறிய இயக்குநர், எது என்ன என்பது படம் வெளியாகும் போது தெரிந்துக் கொள்ளுங்கள், என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.
கொடைக்கானல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கொடியன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...