Latest News :

வழக்கறிஞர் வேடத்தில் நடித்ததற்கு இது தான் காரணம்! - மனம் திறந்த சூர்யா
Friday October-29 2021

சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சாப்ரில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம், சுமார் 240 நாடுகளில் இத்திரைப்படத்தை காண முடியும்.

 

தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதாலும், படத்தின் முக்கிய கதைக்களம் நீதிமன்ற வழக்காடலை மையப்படுத்தியது என்பதாலும் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான பட டிரைலரில் இடம்பெற்ற கூர்மையான வசனங்கள் மூலம் பலரது கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளது.

 

இந்த நிலையில், தான் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து கூறிய நடிகர் சூர்யா, “நான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே, நீதிபதி சந்துரு ஐயாவை சந்தித்தேன். இயக்குநர் த.செ.ஞானவேல் தான் அதற்கு ஏற்பாடு செய்தார். என்னிடம் நீதிபதி சந்துரு பற்றி கூறும்போது அவர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றனர். அவரைப் பற்றிய நிறைய உத்வேகம் தரும் செய்திகளைக் கூறினார். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு வழக்கறிஞர் கட்டணம் பெற்றதில்லை என்பதைத் தெரிவித்தனர். அவரிடம் பேசியும், அவரைப் பற்றி, அவரது இளமைக் கால துடிப்பைப் பற்றி பேசியும், படித்தும் தெரிந்து கொண்டேன். அவருடைய கதை இந்த உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். 

 

Jai Bhim

 

நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யவில்லை. நாங்கள் அவருடைய கதையைச் சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சிதான் ’ஜெய் பீம்’. இத்திரைப்படத்திற்காக நாங்கள் உயர் நீதிமன்ற வளாக செட் போட்டுள்ளோம். இது தமிழ்த் திரைப்படத்தில் இதுவரை யாரும் செய்திராதது. எனவே, இவையெல்லாம் சேர்ந்து தான் என்னை முதல் முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்கவைத்தது.” என்றார்.

 

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜா படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் கலையை நிர்மாணித்துள்ளார்.

Related News

7851

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery