ராகவா லாரன்சின் கனவை நிறைவேற்றிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
Friday October-29 2021

நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றியதோடு, நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து வெற்றிவாகை சூடினாலும் அவருடைய நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறாமல் இருந்த நிலையில், அவருடைய பிறந்தநாளான இன்று (அக்டோபர் 29) அந்த கனவு நிறைவேறியுள்ளது.

 

தனது தம்பி எல்வினை கதாநாயகனாக கோலிவுட்டில் களம் இறக்க வேண்டும், என்பது ராகவா லாரன்சின் நீண்ட நாள் கனவு. தானே ஒரு இயக்குநர் என்றாலும், வேறு ஒரு முன்னணி இயக்குநர் படம் மூலம் தம்பியை  ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும், என்று எண்ணிய ராகவா லாரன்ஸின் எண்ணம் தற்போது ஈடேறியுள்ளது.

 

லாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வித்தியாசமான சிறப்பு வேடம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

 

ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

7853

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery