Latest News :

ஓவியாவுக்கு கிடைக்காதது, பிந்து மாதவிக்கு கிடைத்துவிட்டது!
Friday September-29 2017

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பதை தமிழகமே அறிந்த ஒன்று தான் என்றாலும், இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை யாரும் இதுவரை அறியவில்லை. இருந்தாலும், இந்த போட்டியில் கணேஷ் வெங்கட்ராம் அல்லது சினேகன் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் டைடிலை சொந்தம் கொண்டாடப் போகிறார்கள் என்பது உறுதியான ஒன்று.

 

இந்த நிலையில், ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில், வாரத்தின் இறுதி நாட்களில் அல்லாமல், வாரத்தின் நடுவில், அதாவது நேற்று (வியாழக்கிழமை) ஒருவர் வெளியேற்றப்பட்டார்.

 

பிக் பாஸின் இந்த உடனடி வெளியேற்றத்திற்கு காரணம், நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் நோக்கம் தான்.

 

சரி, இது விஷயமல்ல, நேற்று வெளியேற்றப்பட்ட பிந்து கண்கலங்கியபடி எல்லோரையும் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவருக்கான பெட்டி வந்தது. சினேகன் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினார். பிந்து வந்து அவரைக் கட்டியணைத்துச் சமாதானம் செய்தார். சினேகனை கட்டிப்பிடி வைத்தியர் எனக் கூறிவந்த நிலையில் நேற்று அனைவருமே அந்த நிலைக்கு மாறியிருந்தனர்.

 

பிந்து நான்கு பேரையும் திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்திவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கே நேற்று வெகுநேரம் பிடித்தது. அதிலும் ஆரவ்வை ரொம்ப நேரமாக விடாமல் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் பிந்து மாதவி.

 

சொல்ல போனால் ஓவியாவால் காதலிக்கப்பட்ட ஆரவ், ஓவியா வெளியேறும் போது எந்தவித ரியாக்‌ஷனையும் காட்டாதவர், பிந்து வெளியேறும் போது கதறி அழுதுவிட்டார். அவருக்கு ஏற்றவாறு பிந்துவும் அவரை நெடு நேரமாக கட்டி தழுவிக்கொண்டிருக்க, “ஓவியாவுக்கு கிடைக்காத ஆரவ் பிந்துவுக்கு கிடைத்து விட்டாரோ!” என்று அனைவரையும் நேற்றைய நிகழ்ச்சி அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

Related News

786

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

Recent Gallery