தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை திடீரென்று உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அவரது சம்பள உயர்வு சாதரணமானதாக அல்லாமல், ஒட்டு மொத்த மோலிவுட்டையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளதாம்.
ஆம், சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...