தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.ஆர்.மனோகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர், ‘கோலங்கள்’, ‘தென்னவன்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியதோடு, அப்படத்தில் விவேக்குடன் இணைந்து அவர் ரவுடி கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்தார். அந்த கதாப்பாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் அவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2009 ஆம் ஆண்டு நகுல், சுனைனா ஆகியோரை வைத்து ‘மாசிலாமணி’ என்ற படத்தை இயக்கியவர், அதன் பிறகு நந்தாவை வைத்து ‘வேலூர் மாவட்டம்’ படத்தை இயக்கினார். பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர்,
‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...