Latest News :

பாலிவுட்டில் அறிமுகமாகும் மஹத் ராகவேந்திரா
Friday November-19 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் பாலிவுட் சினிமாவில் நடிக்க பெரும் முயற்சி எடுக்க, ‘மங்காத்தா’ படம் மூலம் நடிகராக அறியப்பட்ட மஹத் ராகவேந்திரா சத்தமில்லாமல் பாலிவுட் படம் ஒன்றில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

 

அஜித்தின் ‘மன்ங்காத்தா’ படத்தை தொடர்ந்து விஜயின் ‘ஜில்லா’ திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்தில் நடித்த மஹத், அப்படத்தை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

 

’கெட்டவனு பேரு எடுத்த நல்லவன்டா’, ’இவன் தான் உத்தமன்’, ‘காதல் கண்டிஷன் அப்ளை’, ‘2030’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வரும் மஹத், ‘சைக்கிள்’ என்ற தெலுங்கு படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்தி திரைப்படத்தில் மஹத் ராகவேந்திரா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த பாலிவுட் பட வாய்ப்பு குறித்து கூறிய மஹத் ராகவேந்திரா, “சில மாதங்களுக்கு முன்னர், பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள நண்பர் சுதீஷ் சென் நான் பாலிவுட் படங்களிலும் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை தந்தார். அவரது அறிவுரையின் பேரில், நானும் சில பாலிவுட் படங்களின் ஆடிசனில் பங்கேற்றேன். பிறகு தமிழ் திரைத்துறையில் எனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாள் முதாஸ்ஸர் அஜிஸ் அவரது படத்தில் நடிக்க புதிய நாயகனை தேடுவதாகவும், அவருக்கு எனது விவரங்களை அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன். எதிர்பாரா ஆச்சர்யமாக படக்குழு முழு திரைக்கதையையும் எனக்கு அனுப்பினர், பின் முதாஸ்ஸர் அஜிஸ் ஜூம் மீட்டிங்கில் முழுக்கதையையும் எனக்கு விவரித்தார். இந்த தருணத்தில் நண்பர் சுதீஷ் சென், ஆஷிஷ் சிங் மற்றும் தயாரிப்பாளர்களான Vipul shahs optimystyx Ashwin varde மற்றும் rajesh Bahl wakhaoo film ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் நான் இப்படத்தில் நடிப்பதற்கு பெரும் துணையாய் இருந்தனர்.

 

Mahat

 

முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி. மொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள். எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. படப்பிடிப்பில் எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரு டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன். இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள். இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணரவைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள். நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால் இப்போது அவரை சக நடிகர் என்பதை விட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

 

இந்தி படத்தில் நடிக்கும் மஹத்துக்கு, அவருடையா  மனைஇவி பிராச்சி மிஸ்ரா தான் இந்தி பேசுவதற்கான பயிற்சியை அளித்தாராம். மேலும், பிரத்யேகமாக இப்படத்திற்காக சில பயிற்சிகளை மேற்கொண்ட மஹத், தனது நடிப்பின் மூலம் பாலிவுட் நட்சத்திரங்களிடம் பாராட்டு பெற்று வருகிறாராம். படம் வெளியானால் நிச்சயம் பாலிவுட் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் கிடக்கும், என்று மஹத் கூறுகிறார்.

Related News

7875

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery