பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வித்யாபாலனின் கார் அதிக சேதம் அடைந்தது. இருப்பினும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான வித்யா பாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் அவர், தனது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’தும்ஹரி சலூ’ என்ற படத்தின் விளம்பர பணிகளில் பிஸியாக உள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...