பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ’காலாபானி’. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான்.
இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். தற்போது ’காலாபானி’ வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் இணைந்து நடித்துள்ள மலையாள படமான ’மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இப்படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள் .
திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி நபேல் இசையமைக்கிறார். ஆர்.பி.பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . இதற்கு முன்பு மோகன்லால் படடங்களான புலி முருகன், லூசிபர் ஆகிய பிரமாண்ட வெற்றி படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகமெங்கும் வி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில், ”சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.” என்றார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...