இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தான் இயக்கும் படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் தலைக்காட்டி வந்தவர், தற்போது முழுநேர நடிகராக உருவெடுத்து வருகிறார். அதிலும், போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘மைக்கேல்’ திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது இவர்களுடன் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...