பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, மார்க்கெட், தியேட்டர்ம் ஹோட்டல், ஹாஸ்டல், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைந்த நிலையில், தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் திரையரங்க தொழில் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசின் இப்படி ஒரு நடவடிக்கை, சிம்புவுக்கு எதிரான நடவடிக்கை, என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் பொதுமக்கள், ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியாகும் போது இப்படி ஒரு நடவடிக்கையை அரசு எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருவதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ”உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...