‘எனிமி’ படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கும் இப்படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ். பிளாக் ஷீப் தீப்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ்.மூர்த்தி கலையை நிர்மாணிக்க, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பை மேற்கொள்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் ஐதராபாத்தின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வெளியீட்டில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, அதுபற்றி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...