வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது ரிலீஸ் வரை வந்துவிட்டது. அதன்படி, நவம்பர் 25 ஆம் தேதி (நாளை) படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன.
இந்த நிலையில், இன்று மாலை திடீரென்று ‘மாநாடு’ படம் வெளியாகாது, என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
ரசிகர்கள் மட்டும் இன்றி ‘மாநாடு’ படக்குழுவினரும் இந்த விவகாரத்தால் சோர்வடைந்து போக, பண பிரச்சனை காரணமாகவே படம் வெளியாகாமல் போவதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையே, பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும், அதனால் இன்று இரவு சுமார் 11.30 மணிக்குள் மாநாடு படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் தெரிந்துவிடும் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில், மாநாடு படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் நாளை (நவ.25) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் தற்போதே திரையரங்கங்களில் கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...