Latest News :

”என்றும் மக்களின் ஹீரோ உதயநிதி” - நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுகாதர் வாழ்த்து
Saturday November-27 2021

சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “திமுக-வின் சின்னமான உதயசூரியனைப் போல் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் வெற்றிவாகை சூடி வருகிறார். இதற்கு அவருடைய கடுமையான உழைப்பும், கூர்மையான அறிவுத்திறனுமே காரணம்.

 

பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வழியில் பயணிக்கும் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக தனது தொகுதி மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றுவதை ஒட்டு மொத்த தமிழகமே பாராட்டி வருவதோடு, எதிர்க்கட்சிகளும் பாராட்டி வருகிறது.

 

விமர்சனங்கள் பல எழுந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து தனது உழைப்பின் மூலம் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, சகோதாரனாகவும், பிள்ளையாகவும், நண்பனகாவும் பாவிக்கும் பொதுமக்கள், அவருடைய பிறந்தநாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

 

ஒரு நடிகராக இருந்த போதே தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்ததோடு, இயற்கை பேரிடர் காலங்களில் தனது ரசிகர்கள் மூலம் மக்களுக்கு உதவிய உதயநிதி, சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் என்றும் மக்கள் ஹீரோவாக வலம் வருவார்.

 

தன் பிறந்தநாளை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பெரும் திருவிழாவாக கொண்டாடி வரும் உதயநிதி அவர்கள், வற்றாத கடல் போல வாழ்ந்து, அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் பல சாதனைகள் படைப்பார், என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Actor Puclic Star Durai Sudhakar

 

’களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்து மக்களை கவர்ந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’, வரலட்சுமியின் ‘டேனி’, ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களில் நடித்து பாராட்டு பெற்றவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

 

யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் விரைவில் வெளியான உள்ள ‘ஆன்டி இண்டியன்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

Related News

7894

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery