பல ஆண்டுகள் தடைகளுக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வடிவேலு, மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த வடிவேலு, முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு தனது வாழ்கை பிரகாசமாகிவிட்டதாக கூறினார். அதேபோல், அவருக்கு தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், உதயநிதி தயாரித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் நடித்திருந்த வடிவேலு, அன்று முதல் உதயநிதியுடன் நல்ல நட்புறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி இணையும் படத்தில் வடிவேலு நடிப்பது கிட்டதட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.
‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ், தனது படங்களில் காமெடி நடிகர் யோகி பாபுக்கு நல்ல குணச்சித்திர வேடங்களை கொடுத்ததால், வடிவேலுவையும் காமெடி நடிகராக மட்டும் இன்றி நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன்படுத்துவார், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...