தமிழ் பிக் பாஸின் ஐந்தாவது சீசனின் தொகுப்பாளரான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், அவருக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருவதும் அனைவரும் அறிந்தது தான்.
தற்போது யாரும் அறியாத பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல சர்ச்சைகள் சூழ்ந்திருக்கும். குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றி இதுவரை தெரியாத சில உண்மைகளும் தெரிய வரும். அந்த வகையில், காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பற்றி, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட இசைவாணி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5-ன் போட்டியாளரான இசைவாணி, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தனது பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தான் பேச வருவதை காது கொடுத்து கேட்காமல், இமான் அண்ணாச்சி பல முறை தன்னை அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை நல்லவராக காட்டிக்கொள்ளும் இமான் அண்ணாச்சி, தனது ஊர்க்காரர் என்பதால் ராஜுவுடன் மட்டும் மிக நட்பாக பழகுபவர், பல முறை தன்னை அலட்சியப்படுத்தும் வகையிலும் நடந்துக்கொண்டார், என்று இசைவாணி கூறியிருக்கிறார்.
அதேபோல், பிக் பாஸ் சீசன் 5 போட்டியில் வெற்றியே பெறக்கூடாத நபர் யார்? என்று தன்னை கேட்டல், இமான் அண்ணாச்சி பெயரை தான் சொல்வேன், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...