உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது .
''மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 'ஸ்ரீ கோகுலம் மூவீஸ்' சார்பில் திரு. கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'பழசிராஜா' என்ற மிக பிரம்மாண்ட படத்தையும் , கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையில் எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் பணியாற்றியுள்ளனர். இந்த மெகா பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இப்படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...