திரைப்படங்களில் மட்டுமே ஒரு நடிகர் நடிக்க வேண்டும், நிஜத்தில் என்றுமே நடிக்க கூடாது, என்ற கொள்கையோடு வாழும் நடிகர் அஜித்குமார், தன்னை வைத்து எந்த ஒரு சர்ச்சையும் உருவாகமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
பொது நிகழ்ச்சியோ அல்லது திரைப்பட விழாக்களிலோ கலந்துக்கொள்ளாமல் இருந்தாலும் கூட அஜித்தின் பெயரால் அவ்வபோது சில பரபரப்புகள் எழுவதுண்டு. அதுபோன்ற நேரங்களில் தனது மேலாளர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதை ஆஃப் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அஜித், இன்று வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை மூலம் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம், அஜித்தை ரசிகர்கள் தல என்று அழைத்து வர, இனி தனது பெயருக்கு முன்பு ‘தல’ என்ற பட்டப்பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று அஜித்குமார் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித்குமார் அல்லது அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம், என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
அஜித்குமார்
இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த அறிக்கையால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அஜித்தின் அன்பு வேண்டுகோளை அவர்கள் ஏற்று, இனி தல என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...