சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘அண்ணாத்த’ ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ரஜினி படமாக இல்லை என்றாலும், வியாபார ரீதியாக படம் வெற்றி பெற்றுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
இருந்தாலும், பட ரிலீஸுக்கு பிறகு வெளியான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவு பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்விக்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.
ரஜினியின் புதிய படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், இயக்குநர்கள் பட்டியலில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், பாண்டியராஜ் பெயரை ரஜினிகாந்த் டிக் அடித்திருக்கிறாராம்.
இயக்குநர் பாண்டியராஜ் கூறிய குடும்ப கதை ஒன்று ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்கவே அவர் அதிகம் விரும்புவதால், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அந்த வாய்ப்பை பாண்டியராஜுக்கு கொடுத்துவிட்டதாம்.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் பட வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...