2002 ஆம் ஆண்டு வெளியான ‘பிளஸ் 2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சுஜா வருணி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திர வேடம் என்று பல கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர், ‘த்ருஷ்யம் 2’ தெலுங்கு படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வரும் சுஜா வருணி, மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார்.
'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், 'சுசீஸ் ஃபன்' என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...