Latest News :

’கண்மணி பாப்பா’ நிகழ்ச்சியில் கவலைப்பட்ட நடிகர்!
Wednesday December-01 2021

அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கத்தில், ராஜேந்திர பிரசாத், சுந்தர்.சி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். 

 

நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசுகையில், ”சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன். பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வர காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் ’கண்மணி பாப்பா’ படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது. மானஸ்வி குழந்தையை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை. இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல, இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமனும் நானும் ஒரே பிரச்சனையை சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022-ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமையவேண்டும்.” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்..

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். "நீங்கள் வந்தால் கலை கட்டும்" என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில். அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது, “கண்மணி பாப்பா படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நல்லாருந்தது. ரொம்ப குவாலிட்டியா பண்ணிருந்தாங்க. இயக்குநர் திறமையாக எடுத்திருந்தார். தமன் நன்றாக நடித்திருந்தார். குட்டிப்பெண் மானஸ்வி சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் நன்றாக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

ஹீரோ தமன் பேசும்போது, “இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம் . ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். இந்தப்படம் மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாய் தேவ் பேசும்போது, “இது எனக்கு முக்கியமான நாள். நான் நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் இது எனக்கு மிக முக்கியமான படம். இந்தப்படத்தில் நான் இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. எக்ஸிகியூட்டிவ் புரோடியூசரும் கூட. இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகவும் நன்றி. இயக்குநர் பெரிய ஹார்ட்வொர்க்கர். அவருக்கு இந்தப்படம் ரொம்ப முக்கியம். ஹீரோ தமன் எங்கள் பேமிலியாகி விட்டார். மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குனர் ஸ்ரீமணி பேசும்போது, ”இறைவனுக்கு நன்றி. மழை மற்றும் டிராபிக் எல்லாவற்றையும் தாண்டி கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லாரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி.” என்றார்.

 

Related News

7903

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது! - சூர்யா, ஜோதிகா, உதயநிதி தேர்வு
Thursday January-20 2022

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் சூர்யா, ஜோதிகா தயாரித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வரும் நிலையில், உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது...

சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்
Wednesday January-19 2022

சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் ‘ஜெய் பீம்’...

இந்திய நிலப்பரப்பின் கடைசி சாலையில் நடைபெறும் திகில் படம் ‘அரிச்சல் முனை’ பூஜையுடன் துவங்கியது
Tuesday January-18 2022

தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியோடு உருவாகும் படங்களுக்கு என்றுமே வரவேற்பு கிடைத்து வருகிறது...