பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார், என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரமின் 61 வது படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 23 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
‘சார்பட்டா பரம்பரை’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது இப்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...