தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்திய திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், நான்கு கதாநாயகிகள் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று உருவாக உள்ளது.
சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்குகிறார்.
‘சார்பட்டா’ புகழ் டாடி ஜான் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஜே.ராம் கலையை நிர்மாணிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட படக்குழுவினரை வாழ்த்தினார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...