ரசிகர்களிடம் பெரும் வரவேற்பும், ஊடகங்களிடம் பாராட்டும் பெற்ற ‘ஜீவி’ படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் ‘க்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுவை உளவியல் பேண்டஸி ஜானர் திரைப்படமான இதில், புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை மையமாக வைத்து ’ஜீவி’ படத்தின் கதை, திரைக்கதை அமைத்து பாராட்டு பெற்ற பாபு தமிழ், இயக்கும் படம் என்பதால் ‘க்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
’ஜீவி’ திரைப்படத்தை போலவே ‘க்’ திரைப்படத்தின் திரைக்கதையையும் வித்தியாசமான உளவியல் பேண்டஸி ஜானரில் எழுதியுள்ள பாபு தமிழ், ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் பேண்டஸி தருணங்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
உலகளவில் உளவியல் த்ரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் பேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட த்ரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். '
தர்ம்ராஜ் பிலிம்ஸ் (Dharmraj Films) சார்பில் நவீன் மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...