Latest News :

சூப்பர் ஸ்டாருக்கு பிறகு சிம்பு தான்! - நடிகர் அஸ்வின் பேச்சு
Monday December-06 2021

தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும் படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஏ.அஹரிஹரன் இயக்கும் இப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.

 

விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பிரபு சாலமன், நடிகர் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின், “இறைவனுக்கு நன்றி அப்புறம் உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன் ஆனால் இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன். என் இடத்தில் இருந்து பார்த்தால் தான் உங்கள் அன்பு புரியும். ’என்ன சொல்லப் போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம். விஜய் டீவி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது, அவர்களுக்கு நன்றி. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தருமா என நினைத்து கூட பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார். அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன். பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ’என்ன சொல்ல போகிறாய்’ தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். ’என்ன சொல்லப் போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர்  ஏ.ஹரிஹரன் பேசுகையில், “ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது,  ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார். அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது  போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

Related News

7911

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery