சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில், அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்’. விரைவில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் தற்போது வாழ்த்து மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார்.
காரணம், தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அகண்டா’ திரைப்படம் ஆந்திரா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படம் வெளியான நாள் முதல் வசூலில் சாதனை படைத்து வரும் இப்படத்தின் வெற்றிக்கு, படத்தின் பிரமாண்டமான காட்சிகளும் காரணம், என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
‘அகண்டா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர், ‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத் தான். எனவே, ராம்பிரசாத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருவதால், அவர் வாழ்த்து மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...