பல வெற்றி திரைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ரெஜிஷ் மிதிலா, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.
தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் லிஜோ ஜேம்ஸுன் இணைந்து இப்படத்தை தயரிக்கும் ரெஜிஷ் மிதிலா, படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார்.
முழுக்க முழுக்க பேண்டஸி வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, மருது பட்டி(குளப்புள்ளி லீலா), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார். சைலோ படத்தொகுப்பு செய்கிறார்.

இன்னும் தகைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையோடு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...