பிரபல நடன இயக்குநரும் பிக் பாஸ் பிரபலமுமான சாண்டி, ’3:33’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
தமிழ் சினிமாவில் திகில் படங்கள் பல வெளியாகி வந்தாலும், வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட கதைகள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகாத வித்தியாசமான திகில் படமாக ’3:33’ உருவாகியுள்ளது.
அதாவது, இப்படத்தின் வில்லனாக நேரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆம், நேரத்தை மையமாக வைத்த ஒரு திகில் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் சாண்டி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்த குறிப்பிட்ட நேரம் நாயகனை பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக்கொள்ளாமல் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டில் நடப்பதாக கதை நடப்பதால் ஒரு வீட்டின் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் ஆவிகளை மர்ம சக்திகளை ஆராயும் ஒரு ஆய்வாளராக முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல், காமெடி இல்லாமல் முழுமையான ஹாரர் அனுபவத்தை தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஃபாம்போ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் (Bamboo Trees Productions) சார்பில் டி.ஜீவிதா கிஷோர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹர்ஷவர்தன் இசையமைக்க, தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்றதோடு, படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படம் நாளை (டிசம்பர் 10) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...