Latest News :

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
Friday December-10 2021

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகும் படம் ‘டான்’. சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

 

சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகன் ஜோடியாக நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த ஜோடி இணையும் ‘டான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, முனிஷ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

 

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

 

Don

Related News

7920

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery