Latest News :

கர்நாடக இசை ஆதிக்கம் செலுத்திய தளங்களில் மக்கள் இசையை களம் இறக்கும் பா.இரஞ்சித்!
Monday December-13 2021

கலைகளை வளர்த்தலும், பண்பாட்டு வேர்களை மீட்டெடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி மக்களை ஒன்று சேர்க்கும், என்ற சமத்துவ நோக்கத்திற்காக இயக்குநர் பா.இரஞ்சித், தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

 

அந்த வகையில், இந்த வருடத்திற்கான இசை நிகழ்ச்சி ‘மார்கழியில் மக்களிசை 2021’ என்ற தலைப்பில் மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 18 ஆம் தேதி மதுரையிலும், டிசம்பர் 19 ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 24 முதல் 31 ஆம் தேதி வரை சென்னையிலும் நடைபெறுகிறது.

 

மதுரையில் காந்தி அருங்காட்சியகம் அரங்கிலும், கோவையில் சிட்ரா ஆடிட்டோரியம் அரங்கிலும் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி, சென்னையில் வாணி மஹால், கிருஷ்ண கான சபா, மியூசிக் அகடாமி, ஐஐடி சென்னை மற்றும் தமிழ் இசை சங்கம் ஆகிய அரங்கங்களில் நடைபெறுகிறது.

 

Margazhiyil Makkal Isai

 

இதுவரை கர்நாடக இசை ஆதிக்கம் செய்து வந்த தளங்களில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் முயற்சியால் மக்கள் இசையும் களம் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு நிலத்தின் சிறப்பையும், வளங்களையும், குடிகளின் வாழ்வையும் அந்நிலத்தின் பாடல்களே நமக்கு விவரித்திருக்கின்றன. இயற்கையை வணங்கி எல்லா உயிர்களும் சமம் என்ற மனம் கொண்டு, ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடி வாழ்ந்த சமத்துவ சமூகம் நம் தமிழ்ச்சமூகமே, என்கிற வரலாற்று உண்மையை உரக்கச் சொல்லும் மக்கள் கலைகளின் பெருமைமிகு மாண்பை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறும், ‘மார்கழியில் மக்களிசை 2021’ தமிழ் நிலத்தின் வரலாற்றில், கலைகளும் பண்பாட்டு வடிவங்களும் ஆற்றிய பங்கினை எடுத்துரைக்கும் நிகழ்வாகவும் நடைபெற உள்ளது.


Related News

7924

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery