Latest News :

காவல்துறை பற்றி இதுவரை சொல்லப்படாத உண்மையை பேசும் ’ரைட்டர்’!
Monday December-13 2021

அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரைட்டர்’. 

 

இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் தனது முதல் படத்தை, தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்பாக உருவாக்கியுள்ளார் என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்.

 

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவிரிக்கும் விதமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.


Related News

7925

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery