Latest News :

பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான சஸ்பென்ஸ் திரைப்படம் ‘பிளட் மணி’
Tuesday December-14 2021

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவான பிரியா பவானி சங்கர், தற்போது கதையின் நாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி, அவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக ‘பிளட் மணி’ (Blood Money) உருவாகியுள்ளது.

 

கிஷோர் மற்றும் ஹிரிஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் பஞ்சு சுப்பு, ராட்சசன் வினோத் சாகர், கலைமாமணி ஸ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

சர்ஜுன் கே.எம் இயக்கியிருக்கும் இப்படத்தை எம்பரர் எண்டட்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இர்பான் மாலிக் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

 

இப்படம் பற்றி நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், “’ப்ளட் மணி’ படத்தில் நான் ஒரு உணர்ச்சிகரமான பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல பத்திரிக்கையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி” என்றார்.

 

நடிகர் கிஷோர் கூறுகையில், ”வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகம் முழுதும் நிகழ்ந்திருக்கும் நகரமயமாக்கலில் இன்று இது சாதாரணமாகிவிட்டது. 'ப்ளட் மணி' வாழ்வாதாரத்தை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் அவலத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அதே நேரம் இன்றைய சமூகத்தில் இதில் உள்ள விவரங்களை வெளிப்படுவத்திலும், சமூகத்தில் இது பற்றிய மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கையும் இது வலியுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பணக்கார வாழ்க்கையைத் தேடி, அனைத்தையும் விட்டுவிட்டு,  வெளிநாட்டிற்கு, தெரியாத நிலத்திற்கு பயணம் செய்வதற்கு முன்பு, எவரையும் ஒருமுறைக்கு இருமுறை இந்த படம் யோசிக்க வைக்கும். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் ஊடகங்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. தனது குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உணர்ச்சிகரமான விஷயங்களை திரையில் கொண்டு வந்ததற்காக புகழ்பெற்ற இயக்குனர் சர்ஜுனுடன் மீண்டும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

 

நடிகர் ஷிரிஷ் கூறுகையில், ”பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும், தலைப்பு செய்தியை விட அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதையும் கூறும் படைப்பாக வரவுள்ளது” என்றார்.

 

இயக்குனர் சர்ஜூன் KM கூறுகையில், "ஜீ 5-இன் மிகச் சிறப்பு மிகுந்த படைப்புகளில் ஒன்றான ’பிளட் மணி’ படத்தின் இயக்குநராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என, 'பிளட் மணி' என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம்” என்றார்.

 

இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை சங்கர் தாஸ் எழுதியுள்ளார். ஜி.பாலமுருகன் DFT ஒளிப்பதிவு செய்ய, சதிஷ் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். சூர்யா ராஜீவன் கலையை நிர்மாண்இக்க பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். கூகை எம்.புகழேந்தி பாடல்கள் எழுதியுள்ளார்.

 

‘மதில்’, ‘விநோதய சித்தம்’, ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டூ அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஜீ 5 ஒடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ‘பிளட் மணி’ திரைப்படம் நேரடியாக வெளியாகிறது.

Related News

7928

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery