வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பரிசோதனை முயற்சி திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான திரைக்கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில், கடின உழைப்பு, திறமை, தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்வது போன்றவற்றால் கோலிவுட்டில் தனக்கென்று தனி இடம் பிடித்த, ‘மாஸ்டர்’ மகேந்திரன், மைக்கேல் தங்கதுரை, சந்தோஷ் பிரதாப் ஆகிய மூவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.
பிளாக் ஹோல் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் (BLACK HOLE PICTURES PRODUCTIONS) சார்பில் எம்.மணிரத்தினம் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஸ்டீபன் ராஜ் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
ஹைப்பர் லிங் வகை திரைக்கதையமைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘புரொடக்ஷன்ஸ் நம்பர் 1’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் துவக்க விழா இன்று எளிமையான பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
சந்தோஷ் பிரதாப், மகேந்திரன், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் ராஜேஷ், லிவிங்ஸ்டன், சூப்பர் சுப்பராயன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மதன் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீவத்சன் படத்தொகுப்பு செய்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிமைக்க, மணிவர்மா கலையை நிர்மாணிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...