ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சத்தியபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘லேபர்’.
சென்னையில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுடைய வாழ்வியல், தொழில் சார்ந்த நிகழ்வுகளை மிக எதார்த்தமாக சொல்லுவதே இப்படத்தின் கதை.
இப்படம் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளது. மேலும், கோயம்புத்தூர் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்றதோடு, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திருமலை உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கே.ராஜான், ”’லேபர்’ படத்தின் டிரைலர் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த கதைக்கு பொருத்தமான முகங்களை நடிகர்களாக்கிய இயக்குநரை வெகுவாக பாராட்ட வேண்டும். கட்டிட வேலை செய்பவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக மதுப்பழக்கத்தினால் அவர்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதனால், மதுபானக் கடைகளை அரசு மூட வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் படத்தின் டிரைலர் மிக எதார்த்தமாக இருப்பதாகவும், படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பாராட்டினார்கள்.
இதில் கதையின் நாயகனாக முத்து நடிக்க, நாயகியாக சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியன், பரோஸ்கான், கயல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிஜில் தினகரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். வி.எம்.ஆறுமுகம் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...