அமிதாப் பச்சன், மெளனி ராய், நாகர்ஜுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள ‘பிரம்மாஸ்த்ரா’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், இந்திய அளவில் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இப்படத்தின் மோசன் போஸ்டரை டெல்லியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியுடன், இயக்குநர் அயன் முகர்ஜி இணைந்து வெளியிட்டார். மேலும், இந்த நிகழ்வில் திரைப்படம் வெளியிட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி ‘பிரம்மாஸ்த்ரா - பாகம் 1’ வெளியாக உள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்ஷன்ஸ், பிரைம் ஃபோக்கர் மற்றும் ஸ்டார்லைட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்க இணைந்து தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரம்மாஸ்திரா - டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் - அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...