Latest News :

மாபெரும் வெற்றி! - மகிழ்ச்சியின் உச்சத்தில் ‘பேச்சிலர்’ படக்குழு
Friday December-17 2021

அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த ‘பேச்சிலர்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

 

தொடர்ந்து பல வெற்றி படங்களையும், தரமான கமர்ஷியல் படங்களையும் தயாரித்து வரும் ஜி.டில்லிபாபு தனது அக்செஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இப்படம் இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, விமர்சர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த வெற்றியால் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ‘பேச்சிலர்’ படக்குழுவினர் அதே மகிழ்ச்சியோடு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சதீஷ் செல்வகுமார் “இந்த வெற்றி டில்லிசாருக்கு தான் சென்று சேர வேண்டும், அவர் தான் இப்படத்திற்கு முழுக்காரணம். நான் இந்தப் பயணத்தில் நிறைய பேரை காயப்படுத்தியிருக்கிறேன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெரும் கூட்டத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு பகலாக இப்படத்தில் உழைத்திருகிறோம். நிஜத்திற்கு அருகில் டிசைன்ஸ் செய்து தந்த கோபி அண்ணாவுக்கு நன்றி.  ஜீவி சார் பச்சிளம் பாடலை அவர் தான் செய்தார். சித்து இந்தப்படத்திற்கு 13 நாள் தூங்காமல் வேலை செய்தார் அவர் இல்லாவிட்டால் இன்னும் ஒரு மாதம் லேட் ஆகியிருக்கும். பக்ஸ் அண்ணா நிஜத்திலும் அண்ணா தான் அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. பேச்சிலர் பசங்க அனைவருக்கும் நன்றி. திவ்யாவுக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு வரும் பாராட்டுக்கள் லோகேஷ்க்கும், ஈஸ்வருக்கும் உரித்தானது. அவர்களுக்கு நன்றி. சக்தி அண்ணா எங்கள் மேல் வைத்த நம்பிக்கை பெரிது. அதற்கு நன்றி. ஒரு கதை எப்படி வேண்டுமானலும் எழுதி விடலாம், ஆனால் அதை நம்பிய ஜீவி சார்  மனசு தான் இந்தப்படம் உருவாக காரணம் அதற்கு அவருக்கு நன்றி. இப்படிபட்ட ஒரு பாத்திரத்தை செய்வதில் அவர் காட்டிய நுணுக்கம் பிரமிப்பானது. டில்லி சார் இல்லாமல் இந்தப்படம் நடக்க 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை அவருக்கு பெரிய நன்றி.” என்றார்.

 

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதற்கு காரணம் டில்லி சார் மற்றும் சக்தி சாரும் தான் காரணம். ஒரு படத்திற்கு இது தான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள் தான். இந்தப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப்படம் 3 வது வாரம் கடந்து அதற்கான ரசிகர்களை சேர்ந்துள்ளது. நீங்கள் தந்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் தான் நாங்கள் எங்களை திருத்திக்கொள்கிறோம். பேச்சிலர் பெரிய பாதிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

படத்தின் நாயகி திவ்யபாரதி பேசுகையில், “சுப்பு பாத்திரத்தை எனக்கு தந்ததற்காக சதீஷ்க்கு முதலில் நன்றி. படம் வந்த நாளிலிருந்து வரும் பாராட்டுக்கள் நிம்மதியான தூக்கத்தை தந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் தந்த விமர்சனங்களுக்கு நன்றி. ஜீவி சார் பெரிய இடத்தை தந்து, ஆதரவு தந்ததற்கு நன்றி. சித்து அருமையான இசையை தந்துள்ளார். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன் பேசுகையில், “உழைப்பை அங்கீகாரம் செய்வது, அனைவராலும் செய்ய முடியாது, நல்லா உழைப்பவர்களால் மட்டுமே தான் அது முடியும். ஒரு தயாரிப்பாளராக அனைவரையும் இங்கு கூட்டி, எல்லோரையும் பாராட்டுகிறார். மிகச்சிறந்த தயாரிப்பாளர் டில்லிபாபு. அவர் ஒரு படைப்பை எமோஷனலாக கனக்ட் ஆகி செய்வார். அவர் மாதிரியான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. பேச்சிலர், ராக்கி இரண்டையும் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, தமிழின் சிறந்த படங்களை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். தம்பி சதீஷ் ஒரு மிகச்சிறந்த கலைஞன். கதை சொல்லலே மிக வித்தியாசமாக இருக்கிறது. ஜீவி சாரின் மூணு முக்கியமான வெற்றிப்படங்களில் நான் இருந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை. ஒரு விசயத்தை எடுத்துகொண்டால் வெறி கொண்டு உழைப்பவர் அவர். இந்த கதாப்பாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்தது மகிழ்ச்சி. பத்திரிக்கை நண்பர்கள் தந்த ஊக்கங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் மிக்க நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு  பேசியதாவது, “இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியவர்களுக்கு நன்றி சொல்ல மட்டுமே இவ்விழா. இயக்குநர் தொடங்கி இதில் உழைத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி அவர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி. சில அறிவுரை சொல்லியுள்ளீர்கள் அதை கேட்டு கொள்கிறோம். இப்படத்தை தமிழகமெங்கும் ஓடி, வெற்றிப்படமாக மாற்றிய பி.சக்திவேலன் அவர்களுக்கும் நன்றி. சஞ்சய் வர்தா சாருக்கும் நன்றி.  எங்கள் நாயகன் ஜீவி பிரகாஷுக்கு நன்றி படமெடுக்கும் போதும், எடுத்த பிறகும் மிகுந்த ஆதரவாக இருந்தார். அவரது வெற்றிப்பயணம் தொடர வேண்டும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.


Related News

7939

காதல் மற்றும் ஊடலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஹாஃப் பாட்டில்’ பாடல்!
Friday April-26 2024

திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...