ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதில் ஆறுச்சாமி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவித்தார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பட்டியலை படக்குழுவினர் அறிவித்தனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற படப்பிடிப்பு பூஜையில், நடிகர் விக்ரம், பாபி சிம்ஹா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தின் முதல் பாதி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...