Latest News :

பேச வைத்த ‘ரைட்டர்’ பட டிரைலர்!
Friday December-17 2021

இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பதிவு செய்வதோடு, தான் தயாரிக்கும் படங்கள் மூலமாக திரையுலகில் மட்டும் இன்றி சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவருடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது.

 

இந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படமும் தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் காவல் நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பதை காண முடிந்தது. 

 

”போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு...”, “காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை...” உள்ளிட்ட பல 

 

வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக ’ரைட்டர்’ இருக்கும் என்று தோன்றுகிறது. 

 

 

அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியிருக்கும் இப்படத்தில், ரைட்டர் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

7940

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery